பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காவல்துறையினரின் அராஜகம்...! பின்னணியில் இராஜாங்க அமைச்சர்

Sri Lanka Police Sri Lankan Tamils Batticaloa Eastern University of Sri Lanka
By Sathangani May 18, 2024 01:37 PM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

புதிய இணைப்பு

கிழக்குப் பல்கலைக்கழ மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது காவல்துறையினர் ஏற்றப்பட்ட தீபங்களை காலால் மிதித்தும், துண்டுபிரசுரங்களைக் கிழித்தெறிந்தும் மாணவர்களை மிரட்டி அராஜகத்தை அரங்கேற்றியிருந்தார்கள்.

இதன்போது, மட்டக்களப்பில் மாத்திரம் எதற்காக முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை குழப்புகின்றீர்கள் என்று மாணவர்கள் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காவல்துறையினரின் அராஜகம்...! பின்னணியில் இராஜாங்க அமைச்சர் | Mullivaikal Commemoration Was Distrupted By Police

இதன்போது பல்கலைக்கழக நிகழ்வுகளைக் குழப்பும்படி உங்கள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் எங்களுக்கு கடுமையான அழுத்தம் வழங்குகின்றார் என்று ஒரு தமிழ் காவலர் இரகசியமாகக் தெரிவித்ததாக பல்கலைக்கழ மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பு (Batticaloa) - கிழக்கு பல்கலைக்கழத்தில் (Eastern University, Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்துக்கு முன்பாக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 9.30 மணி அளவில் குறித்த நிகழ்வு நடைபெற இருந்த போதிலும் மாணவர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மஞ்சள் சிவப்பு நிற கொடிகளை காலையில் வந்த காவல்துறையினர் அகற்றியதோடு அவற்றை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருந்தனர்.

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

காணொளி பதிவு

இதன் காரணமாக மாணவர்கள் அங்கிருந்து சென்று பின் கஞ்சியினை வழங்கலாமென முடிவெடுத்து கஞ்சி காய்ச்சுவதற்கான ஆயத்த வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.


இதேவேளை அங்கு வந்த ஏறாவூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஏனைய காவல்துறை அதிகாரிகளும் பதாகைகள் மற்றும் சுடர்கள் ஏற்றப்படக்கூடாது எனக்கூறி தடுத்ததுடன் அங்கிருந்த பதாகைகளை கிழித்து எறிந்து மாணவர்களை மிகவும் அச்சுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தொடர்ச்சியாக சீருடை தரிக்காத காவல்துறையினர் அங்கிருந்த அனைவரையும் காணொளி பதிவு செய்ததோடு ஊடகவியலாளர்களையும் தெளிவாக தெரியும் வகையில் பதிவுகளை எடுத்திருந்தனர்.

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

அச்சுறுத்திய காவல்துறையினர்

மேலும் மாணவர்கள் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்த இருந்தவேளை அதை தடுத்ததோடு அந்த இடத்தை விட்டு கலையும் படியும் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்லும்படியும் இல்லையென்றால் உங்களை கைது செய்வோம் எனவும் மாணவர்களை காவல்துறையினர் மிரட்டினர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காவல்துறையினரின் அராஜகம்...! பின்னணியில் இராஜாங்க அமைச்சர் | Mullivaikal Commemoration Was Distrupted By Police

இந்த நிலையில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள், இதை ஏன் தடுக்கிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கும் சரியான பதில் இல்லாமல் “இவர்களை கலைந்து செல்ல சொல்லுங்கள் இல்லையென்றால் இவர்களை கைது செய்வோம்“ என அச்சுறுத்தி இருந்தார்கள்.

மேலும் அங்கிருந்த அவர்களுடைய பெயர்களை சேகரிப்பதில் காவல்துறையினர் ஆர்வமாக இருந்ததுடன் வீதியால் சென்ற கஞ்சியினை பெற வந்தவர்களை கூட காவல்துறையினர் அச்சுறுத்தி துரத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு பெரும் அராஜகத்தை நிகழ்த்திய காவல்துறையினர் கஞ்சிப்பானை, அங்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மேசை என எல்லாவற்றையும் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு தலைநகரிலும் நினைவேந்தல்: முக்கிய திருப்புமுனை என்கிறார் சுமந்திரன்

இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு தலைநகரிலும் நினைவேந்தல்: முக்கிய திருப்புமுனை என்கிறார் சுமந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020