வவுனியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ். பல்கலைக்கழக, வவுனியா (Vavuniya) கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (13.05.2025) வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை கஞ்சி வாரம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்று காலை 11 மணியளவில் வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக யாழ். பல்கலைக்கழக, வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா - இலுப்பையடி பகுதியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
