பிரித்தானிய நாடாளுமன்ற அரங்கில் நடந்த மே -18 நினைவேந்தல் - பிரான்சிலும் முன்னெடுப்பு
தமிழர் தாயகத்தின் மீதான பெரும் இனப்படுகொலையாக பதிவாகியுள்ள முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு நிகழ்வுகள் தாயகம் மற்றும் புகலிட நாடுகளில் இடம்பெற்றுவருகின்றன.
அந்த வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நினைவேந்தல் நிகழ்வும் நீதிகோரும் ஒன்று கூடலும் இடம்பெற்றுள்ளது.
தொழிற்கட்சிக்கான தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு தொழிற்கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் சென். கந்தையா தலைமை தாங்கியிருந்தார்.
இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் நிழல் வெளியுறவு அமைச்சர் டேவிட்லாமி உட்பட்ட நிழல் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்களும் பங்கெடுத்து உரையாற்றியுள்ளனர்.
கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இந்த நிகழ்வு நேரடியாக நடத்தப்படாத நிலையில், இன்று இந்த நிகழ்வு நேரடியாக நடத்தபட்டுள்ளது.
நாளை மறுதினம் பிரித்தானியாவில் செயற்படும் தமிழ் அமைப்புகள் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் மற்றும் நீதிகோரும் போராட்டங்களை நடத்துவதற்கான ஆயத்தங்களை செய்துவருகிறது.
இதேவேளை, முள்ளிவாய்கால் பேரவலத்தின் நினைவை முன்னுறுத்தி பிரான்சின் வரலாற்று சிறப்புமிக்க வேர்செய் அரண்மனைக்கு அருகில் உள்ள நகரசபை முன்றலில் தமிழின படுகொலைக்கு நீதிகோரும் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று இன்று மாலை நடத்தப்பட்டிருந்தது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிராங்கோ தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வு நடத்தப்பட்ட போது அதற்கு அருகில் மனித உரிமை செயற்பாட்டாளர் கஜனால் நிழற்படக்கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
