யாழில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று(18) மதியம் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இதன் பொழுது உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இலங்கை தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையினரால் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும் முன்னாள் போராளியுமான ஆண்டிஐயா விஜயராசவினால் பொது சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் காரைநகரில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான தவமணி , நாகராஜா, சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |