மன்னார் நானாட்டானில் மழைக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் (Charles Nirmalanathan) ஏற்பாட்டில் மன்னார் - நானாட்டான் பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
அதன்போது, இன்று வியாழக்கிழமை (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் இடம் பெற்றது.
அதேவேளை, கடும் மழைக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களை மக்கள் நினைவு கூறினர்.
கலந்து கொண்டோர்
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மக்கள், தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை, கடந்த 12 ஆம் திகதி முதல் தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவேந்தேல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |