பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமையுங்கள் - ரவிகரன் எம்.பி கோரிக்கை

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Mullivaikal Remembrance Day
By Thulsi Dec 18, 2024 04:03 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2024 நவம்பர் 27 ஆம் திகதி எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளை செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர்.

இறுதிப்போரின் வலிகள் 

அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


இலங்கைத் தீவில் காலங்காலமாக தொடர் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்கள், 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் வார்த்தைகளில் அடக்க முடியாத துன்பத்தை அனுபவித்து இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர்.

இறுதிப்போரின் வலிகள் இன்னும் ஆறாத நிலையில் அப்போரில் தமது உறவுகளை இழந்த ஏராளமான மக்கள் இன்னும் தம் உணர்வுகளுடன் நடைபிணங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

குண்டுகள் விழுந்து உறவுகள்

தம்மை யாராவது காப்பாற்ற மாட்டார்களா? என்ற ஏக்கத்தில் சின்னஞ்சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை ஏங்கித்தவித்த நிலை, "பசி, பசி" எனக் குழந்தைகள் அழும்போது செய்வதறியாத நிலையில் பெற்றோர்கள் கலங்கிய அவலநிலை.

பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமையுங்கள் - ரவிகரன் எம்.பி கோரிக்கை | Mullivaikkal Monument Tamil Mp Requested

பதுங்குகுழிகளைவிட்டு வெளியேவந்தால் தப்பமுடியாது என்றெண்ணி பதுங்குகுழிகளுக்குள்ளேயே தங்கியிருந்த நேரம் அதற்குள்ளேயும் குண்டுகள் விழுந்து உறவுகள் மடிந்தபோது உயிரிழந்த தமது உறவுகளைப் புதைப்பதற்கு இயலாமல் உடலங்களை அவ்வாறே விட்டு ஓடிய நிலமைகள், ஆகியவற்றை எண்ணிப்பாருங்கள்.

இலட்சக்கணக்கில் தமிழ் உறவுகளைப் பலிகொண்ட அந்தப் பேரவலம், தமிழ்த்தேசிய இனத்தின் கூட்டு மன உளவியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்தநிலையில் அங்கு உறவுகளை இழந்து, தற்போது வாழ்ந்துவருகின்ற மக்கள் தம் உறவுகளை நினைவுக்கூர்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நினைவிடம் தேவை என்பதை அங்குள்ள மக்கள் ஆதங்கத்துடன் கூறிவருகின்றனர்.

அதிகமான மக்கள் உயிரிழந்த ஒரு அவலம்

உயிரிழந்தோரை நினைவுகொள்ளும் விதத்தில் உலகின் மூத்தகுடிகளில் ஒன்றான தமிழ் இனம், மிக உயர் நாகரீக பண்பாடுகளைக் கொண்டுள்ளது. எம் இன வரலாற்றில் மிக அதிகமான மக்கள் உயிரிழந்த ஒரு அவலம். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர ஒரு நினைவாலயம் அமைக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமையுங்கள் - ரவிகரன் எம்.பி கோரிக்கை | Mullivaikkal Monument Tamil Mp Requested

ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கென முல்லைத்தீவில் மட்டுமல்ல, பல இடங்களில் நினைவுமண்டபம் அமைக்கப்பட்டு அதில் உயிரிழந்த ஒவ்வொருவருடைய பெயரும் குறிக்கப்பட்டுள்ளது.

இது காலாகாலத்திற்கும் உயிரிழந்தோரின் உறவுகளையும், சந்ததியினரையும் நினைவுகூர வழிசமைக்கின்றது. அதேபோன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாகக் கட்டப்படும் ஆலயத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்படுவது தத்தமது உறவுகளை காலாகாலத்திற்கும் அவர்களின் சந்ததிகள் நினைவுகூர வசதியாக இருக்கும். எம் இனத்தின் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக அமையும்.

தேசிய பேரவலத்தின் சாட்சி

அந்தவகையில் தேசிய பேரவலத்தின் சாட்சியாக நினைவு ஆலயம் முள்ளிவாய்க்காலில் மே -18 நினைவுகூருமிடத்தில் அமைக்கப்படவேண்டும்.

இறந்தவர்களை நாங்கள் அடக்கம்செய்யும்போது கல்லறைகளை அதன்மேல் அமைக்கின்றோம்.

பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமையுங்கள் - ரவிகரன் எம்.பி கோரிக்கை | Mullivaikkal Monument Tamil Mp Requested

அந்தக்கல்லறைகளில் சம்பந்தப்பட்ட உறவுகள், நினைவுதினங்களில் பால் தெளித்து, படையல்களைப் படைத்து, பூக்கள் சொரிந்து, தீபம் ஏற்றி தங்களுடைய மனக்கவலையை உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தி அழுது ஆற்றுகின்ற அந்த நிலைக்கு எமது மக்களையும் ஈடுபடுவதற்கு ஒரு நினைவாலயத்தை அமைப்பதற்கு எமது மக்களுக்கு அனுமதிதாருங்கள்.

இனப்பாகுபாடு பாராது, நாம் முள்ளிவாய்க்காலில் ஓர் நினைவாலயம் அமைப்பதற்கு அனுமதிதாருங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.  

ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016