தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி (Kilinochchi) இரணைமடு சந்தியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பிரதி தலைவர் ப.குமாரசிங்கம் தலமையில் பிற்பகல் 5.00 மணியளவில் ஆரம்பமானது.
பொதுச்சுடர்
பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்து கிறிஸ்தவ மதகுருமார் கலந்து கொண்டு பொதுச்சுடரினை ஏற்றினர்.
தொடர்ந்து மாலையினை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதனும் கிளிநொச்சி வர்த்தக பிரதிநிதி ரவியும் இணைந்து
அணிவித்தார்கள்.
மலரஞ்சலி
அதனையடுத்து, மலரஞ்சலி நிகழ்வை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் நிர்வாக செயலாளர் தீபாவும், தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர் சாலினியும் ஆரம்பித்து வைக்க மலரஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
பின்னர், உயிரிழந்தவர்கள் நினைவாக மத பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மத குருமார்கள் மற்றும் தமிழ்த் தேசிய பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |