முள்ளிவாய்க்கால் மண்ணில் திரளுங்கள் - யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அறைகூவல்

By Independent Writer May 18, 2025 02:11 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

இனப்படுகொலை செய்யபட்ட எம் உறவுகளை நினைவு கூர முள்ளிவாய்க்கால் மண்ணில் வடகிழக்கு வாழ் தமிழர்கள் தேசமாக திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தயாபரன் லகிர்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் ஏற்பாடுகளில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை செய்யபட்ட இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்வதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக வருகை தந்துள்ளோம்.

இனப்படுகொலை செய்யபட்டு 16 ஆண்டுகள் 

இன்றுடன் எமது இனம் இனப்படுகொலை செய்யபட்டு 16 ஆண்டுகள் நிறைவடைகின்றது .தமிழ் மக்களாக அனைத்து ஈழத் தமிழர்களுக்கும் வரலாற்று கடமை உள்ளது

எமது இந்த வரலாறு அடுத்த கட்ட சந்ததிக்கு கடத்த படவேண்டும். சர்வதேச சமூகத்திற்கு தொடர்ச்சியாக எமது வலிகளையும் வடுக்களையும் தொடர்ந்து நாம் கூறவேண்டும்.

அதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ள உயிர்நீத்த எம் உறவுகளை நினைவு கூரும் நினைவேந்தலில் இளைஞர்களாக, யுவதிகளாக,தந்தையர்களாக, தாய்மார்களாக, உறவுகளாக, சமூக அமைப்புக்களாக, மாணவர்களாக தேசமாக முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு வடகிழக்கு தமிழர்கள் திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக கேட்டுக்கொள்கிறோம்.

உயிர்நீத்த எம் உறவுகளை நினைவு 

இந்த நாளில் களியாட்டஙகளில் கலந்து கொள்வதை தவிர்த்து எமது மண்ணில் எமது தாய் மொழியான தமிழ் மொழியை பேசினார்கள் என்பதற்காக ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

உணர்வுசார்ந்த நிலைபாட்டில் அனைவரும் திரள வேண்டும் ஆகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைவருடைய வருகையும் அவசியமானது.

அது மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அடுத்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பில் ஓர் அங்கமாக இணைந்து செயற்படும் தொடர்ந்து மாணவர்களாக எமது நினைவேந்தல் சார் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார் 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019