முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காவல்துறையினரின் அராஜகம்: கொதித்தெழுந்த சிங்கள சமூகம்!
திருகோணமலை(Trincomalee) - சம்பூர் சம்பவம் தற்பொழுது பேசுபொருளாகியுள்ள நிலையில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான கடந்த (12)ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இதற்கு கண்டனங்கள் வெளியாகியுள்ள நிலையில், நடவடிக்கைக்கு தங்களது எதிர்ப்புக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ் சமூகம் மாத்திரம் இன்றி சிங்கள தரப்பினரும், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
பெரும்பான்மை இன பெண்மணி ஒருவர் “காவல்துறையினரின் இது போன்ற அராஜக செயற்பாடுகள் தொடரும் எனில், முழு நாடும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பினை தெரிவிப்போம் ”என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |