முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மனதை உருக்கும் சிங்கள இளைஞனின் நெகிழ்ச்சியான பதிவு
இலங்கையின் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை இடம்பெற்று இன்று 15 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
30 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே18 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதன்போது தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டதுடன் காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்வில்
இந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இளைஞன் ஒருவர் கலந்து கொண்டதுடன், அங்கு இடம்பெற்ற கவலை மிகுந்த நிகழ்வுகளையும் தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
அவருடைய அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது ”எங்கள் சொந்த மக்களை அழ வைத்து நாங்கள் வென்றது போர் அல்ல.
ஒரு தென்னை மரத்தின் வாழ்க்கையை அடையாளப்படுத்துவதன் மூலம் முள்ளிவாய்க்காலில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூறுகின்றார்கள்.
கண்ணீர் வடிக்கும் தாய்மார்
முள்ளிவாய்க்கால் படுகொலையை அடையாளப்படுத்த இந்த தென்னை மரங்கள் போதாது.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முள்ளிவாய்க்காலில் அழுது கண்ணீர் வடிக்கும் தாய்மார் ஈடு இணையில்லாதவர்கள். தனது பிள்ளையின் இழப்பின் வலி தாய் ஒருவருக்கு மட்டுமே தெரியும்.
தமிழ் மக்களின் கண்ணீரின் வலி தென்னிலங்கை மக்களுக்கு புரிந்து கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளதாகவும் சில சிங்கள இளைஞர்கள் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |