முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலத்தின் நினைவுநாள்: அறைகூவல் விடுக்கும் தமிழர் தரப்பு

Sri Lankan Tamils E Saravanapavan Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples
By Dilakshan May 11, 2024 08:38 PM GMT
Report

ஈழத் தமிழர் வாழ்வில் பெருந்துயர் தோய்ந்த மறக்கவே முடியாத பெரும் வலியைத் தந்து சென்ற முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலத்தின் நினைவுநாள் இன்று (12) ஆரம்பமாகின்றது.

அதன்படி, இந்த ஒரு வாரத்துக்கு களியாட்டங்களைத் தவிர்த்து, குறுகிய நிலப்பரப்புக்குள் கொன்றுகுவிக்கப்பட்ட எங்கள் உடன்பிறப்புக்களுக்காக ஆத்மார்த்தமாக வழிபடுவோம் என  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈ.சரவணபவன் (E.Saravanapavan) அறைகூவல் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாவதை முன்னிட்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், நீதியின் அச்சாணியில் சுழலாத இந்த உலகம், அதிகாரமற்ற தமிழர்களை அடக்கி ஒடுக்கி அணுவணுவாய் கொல்வதை வேடிக்கைபார்த்த அந்தப் பெருந்துயரம் அரங்கேறி இன்றுடன் 15ஆண்டுகள் நிறைவுறுகின்றன.

தமிழர்களின் வாக்குகளை கவர ரணில் முயற்சி! குற்றம் சாட்டும் சிங்கள எம்.பி

தமிழர்களின் வாக்குகளை கவர ரணில் முயற்சி! குற்றம் சாட்டும் சிங்கள எம்.பி


சிங்கள ஆட்சியாளர்கள்

பச்சிளங் குழந்தைகளையும், பசியால் பல மணிநேரம் கால்கடுக்க கஞ்சிக்காக காத்திருந்த சிறுவர்களையும் ஈவுஇரக்கமின்றி கொத்துக்குண்டுகளை வீசிக்கொன்றொழித்த சிங்கள அரசுக்கு இன்றும் செங்கம்பளம் வீசிக்கொண்டிருக்கும் சர்வதேசத்திடம்தான் நாமும் எமக்கான நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலத்தின் நினைவுநாள்: அறைகூவல் விடுக்கும் தமிழர் தரப்பு | Mullivaikkal Remembrance Day Starts

பூகோள பந்தின் அரசியல் சடுகுடுதனங்களும், சகுனி ஆட்டங்களும் எங்களின் நீதிக்கான பாதையை எங்காவது திறப்பதற்காக வாய்ப்பை ஏற்படுத்தித்தராதா என்ற அங்கலாய்ப்பிலேயே காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கின்றோம்.

தாய்நிலம் இன்று சிங்கள ஆட்சியாளர்களால் வன்புணரப்பட்டுக்கொண்டிருக்கின்றது,  அந்நியர்களால் பங்குபிரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

நீதிக்கான பயணம்

அடுத்த தலைமுறை தாய்நிலத்திலிருந்து தப்பியோடத்துடிக்கின்றது, எங்கள் பேரவலங்களையும் வலிகளையும் மறக்கச்செய்கின்ற நிகழ்ச்சி நிரல் இளம் சமூகத்திடையே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் என்னும் பேரவலத்தின் நினைவுநாள்: அறைகூவல் விடுக்கும் தமிழர் தரப்பு | Mullivaikkal Remembrance Day Starts

எம்மைச் சூழ்ந்திருக்கும் இந்தச் சவால்களையும் தாண்டியே நீதிக்கான பயணத்தை தொடரவேண்டியிருக்கின்றது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் மடிந்த அந்த ஆன்மாக்கள், நாங்கள் நீதியைப்பெற்றுத் தருவோம் என்று இன்றும் நினைத்துக்கொண்டிருக்கின்றன. அதற்காக காத்திருக்கின்றன.

அந்த ஆன்மாக்களின் நினைவுகளுக்கு உயிர்கொடுக்க நாம் ஆத்மார்த்தமாக உழைப்போம், என்றுள்ளது.

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு: பங்கேற்ற சிங்களவர்கள்

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு: பங்கேற்ற சிங்களவர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024