வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி
Tamils
Mullaitivu
Mullivaikal Remembrance Day
By Shadhu Shanker
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக தமிழர் தாயகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தாயக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இறுதி உயிரை காப்பாற்ற வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சியானது முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டடத்திற்கு முன்பாக இன்று (16.05.2024) காலை வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம்
முள்ளிவாய்க்காலில் உயிர்த்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி