தாயின் நினைவாக பல மில்லியன் மதிப்பில் கட்டப்பட்ட அதிசய தாஜ்மஹால்!
மறைந்த தாயாரின் நினைவாக 1 ஏக்கர் நிலப்பரப்பில் தாஜ்மஹால் போன்ற மணிமண்டபத்தை மகன் ஒருவர் கட்டியுள்ளார்.
இந்தியாவின், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாயாரின் பெயரில் இந்த அதிசய தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் பிரபல தொழிலதிபராக உள்ள அமீர்தீன் என்பவர், தாய், தந்தை இருவர் மீதும் அளவற்ற அன்பு கொண்டவர், தனது சொந்த கிராமத்தில் உள்ள ஏழைகளுக்கு அவர்கள் சார்பாக பல உதவிகளையும் செய்து வருகிறார்.
அதிசய தாஜ்மஹால்
அவரது தந்தை இறந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தாய் ஜெய்லானி பீவி அம்மாள் என்பவர் அண்மையில் இறந்தார்.
அதன்பிறகு தொழிலதிபர் அமீர்தீன் அம்மையப்பன் கிராமத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் அதாவது 8,000 ஏக்கர் சதுர அடியில் தனது தாயாரின் பெயரில் மணிமண்டபம் கட்டியுள்ளார்.
தாஜ்மஹால் போன்று தோற்றமளிக்கும் இந்த மணி மண்டபம் முழுக்க முழுக்க ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது.
சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் இதனை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியமாக பார்க்கப்படுகின்றது.
மணிமண்டபத்துடன் சேர்த்து அமீருதீன் மதரஸாவையும், மசூதியையும் காட்டியுள்ளார்.
இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் எரியும் கட்டிடம் வளைகுடா நாடுகளில் உள்ள மசூதிகள் போல் காட்சியளிப்பதாக கூறப்படுகின்றது.