யாழ் பல்கலையில் "பன்னாட்டுக் குற்றங்கள்" புத்தகம் வெளியீடு (படங்கள்)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப செயலாளர் இ.நா.சிறிஞானேஸ்வரன் எழுதிய "பன்னாட்டுக் குற்றங்கள்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று(28) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறைத் தலைவரும் பேராசிரியருமான சி.ரகுராம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பன்னாட்டுக் குற்றங்களும் தமிழினமும்
இந்நிகழ்வில், "பன்னாட்டுக் குற்றங்களும் தமிழினமும்" எனும் தலைப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரையாற்றியிருந்தார்.
செ.விந்தன் புத்தகத்தை வெளியிட்டு வைக்க முதற்பிரதியை நாகமணி இராமநாதன் பெற்றுக்கொண்டார்.
புத்தகத்திற்கான மதிப்பாய்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான கே.ரி.கணேசலிங்கம் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.