ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு கிடைக்கபோகும் அதிரடி சலுகை...! ட்ரம்பின் அறிவிப்பு
ஈரான் தரப்பிலிருந்து அமெரிக்காவிற்கு ஒரு சலுகை அல்லது முன்மொழிவு வரவுள்ளதாகவும் ஆனால் அதன் விவரங்கள் இன்னும் தமக்குத் தெரியவில்லை எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், அவர்கள் ஒரு முன்மொழிவை வழங்கி வருகின்றனர் அது என்னவென்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
விரிவான தகவல்கள்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான பாரசீக வளைகுடா நீர்வழியான ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா இந்த மாத தொடக்கத்தில் நேரடி இராணுவ முற்றுகையை (Naval Blockade) நடைமுறைப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாகத் தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடைகள், ஈரானிய எண்ணெயைக் கையாளும் சர்வதேச நிறுவனங்களைக் குறிவைத்துள்ளன.

அத்தோடு, அந்த முன்மொழிவின் விரிவான தகவல்கள் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் யாருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று அவரிடம் கேட்கப்பட்ட போது அதை நான் இப்போது சொல்ல விரும்பவில்லை எனவும் ஆனால் தற்போது அதிகாரத்தில் இருப்பவர்களுடன் நாங்கள் பேசி வருகிறோம் எனவும் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
இருப்பினும் முன்னதாக ஈரானியத் தலைமைக்குள் நிலவும் நிச்சயமற்ற தன்மை, பேச்சுவார்த்தைகளில் சிக்கல்களை உருவாக்குவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்