நான்கு வாகனங்கள் மோதி அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று (01) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு வாகனங்கள் மோதின
ஒரு பாரவூர்தி இரண்டு வான்கள் மற்றும் ஒரு மகிழுந்து ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதாவது மாத்தறையிலிருந்து கொழும்புக்கு அரிசி ஏற்றிச் சென்ற பாரவூர்தி, சொகுசு வான் மீது பின்னால் மோதிய நிலையில் பின்னால் பின்தொடர்ந்து வந்த ஒரு கார் வான் மீது மோதியதுதில் இந்த விபத்து நிகழ்ந்தது
இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
22 மணி நேரம் முன்