ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் வெட்டி கொலை - தீவிர விசாரணையில் காவல்துறையினர்
By pavan
களுத்துறை வடக்கு கெலிடோ வீதியில் வீடொன்றின் பின்புறத்திலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டின் பின்புறத்தில் பெண்ணின் சடலத்தை பார்த்த அவரது மகள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
ஆயுர்வேத வைத்தியர் ஒருவரே கொலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியும் குறித்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி