வட்டுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன்: சம்பவத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு கடும் கண்டனம்

Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lankan Peoples
By Dhilak Dec 04, 2023 02:22 AM GMT
Report

வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அலெக்ஸிற்கு நீதி வேண்டும், ஆனால் குறித்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோமென யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் துரைராஜா சுயிந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று(03) வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, “இந்த படுகொலை சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் சார்ந்த சில செயல்பாடுகளை முன்னெடுத்து, ஓரிருவரை வைத்து அரசியல் நாடகம் செய்வதை தமிழ் மக்களாகிய நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வீடுகளை முற்றுகையிடுவார்கள்: தமது கட்சிக்கே பகிரங்க எச்சரி்க்கை விடுத்த எம்.பி

மக்கள் வீடுகளை முற்றுகையிடுவார்கள்: தமது கட்சிக்கே பகிரங்க எச்சரி்க்கை விடுத்த எம்.பி


நீதி வேண்டும்

அவர் தொடர்ந்தும் கூறுகையில், அலெக்ஸிற்கு நடந்த விடயம் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம், அதற்கு நீதி வேண்டும்.

வட்டுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன்: சம்பவத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு கடும் கண்டனம் | Murdered Vattukkottai Police Station Wants Justice

இந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு அரசியல் ரீதியான செயல்பாடுகளை செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஏனென்றால் அலெக்ஸிற்கு நீதி வேண்டும் என்பது உண்மையான விடயம் அது வட்டுக்கோட்டை காவல்துறையினராகவும் இருக்கலாம் அல்லது வேறு எந்த காவல்துறையினராகவும் இருக்கலாம் இதற்கு நீதி வேண்டும் என்பது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.

இது சம்பந்தமான அரசியல் சார்ந்த சில செயல்பாடுகளை முன்னெடுத்து, ஓரிருவரை வைத்து அரசியல் நாடகம் செய்வதை தமிழ் மக்களாகிய நாங்கள் நிராகரிக்கின்றோம்.

ஏன் என்று சொன்னால் நானும் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு விடயத்திலே இந்த விடயத்தை தெளிவுபடுத்துகின்றேன். உண்மையில் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை அரசியலோடு வைத்திருக்க வேண்டும், மக்கள் சார்ந்த விடயங்களை மக்களுக்கு சரியான முறையில் வழிநடத்த வேண்டும்.

மன வேதனையான விடயம்

மக்களை பிழையான முறையில் வழி நடத்திக் கொண்டு அரசியல் ரீதியான செயல்பாடுகளை இந்த இடத்தில் கொண்டு காட்டுவது என்பது உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

வட்டுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன்: சம்பவத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு கடும் கண்டனம் | Murdered Vattukkottai Police Station Wants Justice 

காவல்துறை குற்றம் செய்திருக்கின்றது, காவல்துறைக்கு தண்டனை கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது, தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கையாக இருக்கின்றது.

அந்தக் கோரிக்கையை நாங்கள் மறுக்கவில்லை, அதற்கான நீதி கட்டாயம் தேவை அந்த நீதிக்காக நாங்கள் போராட வேண்டும்.

ஆனால் அரசியல் சார்ந்த தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களுடைய சின்னங்கள் பொறிக்கப்பட்ட விடையங்களை காட்டி தங்களுக்கு சுயலாப அரசியலை தேடுகின்றவர்கள் உண்மையில் இந்த தமிழ் மக்களுக்காக இப்போது கதைப்பார்கள் நாளைக்கு இருக்க மாட்டார்கள்.

அலெக்ஸ் இறந்த உடன் இந்த இடத்துக்கு யாரும் வரவில்லை அது மன வேதனையான ஒரு விடயம் அந்த இடத்தில் நாங்கள் நின்றிருந்தோம்.

ஓரிரு பத்திரிகையாளர்களுடன் இரவு எட்டு மணி வரை இவ்விடத்தில் இருந்து இருக்கின்றோம் யாரும் வரவில்லை, தங்களுடைய தேவைகளுக்காக இப்போது வந்து ஒரு வேலை திட்டத்தை செய்கிறார்கள்.

உண்மையில் அலெக்ஸிற்கு இனி வரும் காலத்தில் ஒரு நீதி வேண்டும். அந்த நீதிமன்றத்தின் ஊடாக கட்டாயம் கிடைக்கும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம், அவர்கள் ஊடாக வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு உடனடியாக நடவடிக்கை தேவை என்பதையும் நாங்கள் விரும்புகின்றோம்.

இதில் மக்கள் யாரும் எந்த விடயத்தை கூறினாலும் அரசியல் செயற்பாட்டாளர்கள் அரசியல் சார்ந்த விடயங்களை மக்களை வைத்து பாவிக்க வேண்டாம் என்பதை நான் கூறுகின்றேன்” என கூறியுள்ளார்.

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அதிரடி நடவடிக்கை: கல்வி அமைச்சரின் அறிவிப்பு

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப அதிரடி நடவடிக்கை: கல்வி அமைச்சரின் அறிவிப்பு

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026