இசையமைப்பாளர் தேவா மறைவு: முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி
மறைந்த தென்னிந்திய இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் உடலுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
அதேநேரம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் முக்கிய திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் தேவாவின் பூதவுடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படம்
தென்னிந்திய இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா மாரடைப்பு காரணமாக காலமானார்.
தேனிசை தென்றல் தேவா தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார்.

ஏறத்தாழ 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்குப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்
400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில், ராஜ் சிவராஜ் இயக்கத்தில் பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படத்தில் அவர் அண்மையில் பாடல் ஒன்றினை பாடினார்.
ஈழத்துத் தமிழ் திரைப்படமான போராட்டம் திரைப்படத்தில், "சோறு தான் முக்கியம்" என்ற பாடல் தேவா குரலில் அண்மையில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |