திருமண பதிவு கட்டளைச் சட்டம்- முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி!
திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் திருமணம் மற்றும் விவாகரத்து செய்வதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
குடியியல் சட்டக்கோவை மற்றும் குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையில் திருத்தம் செய்ய நீதியமைச்சர் அலி சப்ரி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அரசியலமைப்பின்படி எந்தவொரு குடிமகனும் இனம், மதம், மொழி, சாதி, பால் மற்றும் அரசியல் கொள்கைகள் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்ட இடமளிக்கப்படாது என அரசாங்கம் கூறியுள்ளது.
இருப்பினும், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் பெண்களுக்கு பாகுபாடு காட்டும் குறிப்பிட்ட விதிகளை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய விதிகளை சட்டத்திலிருந்து ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை முஸ்லிம் மகளீர் அமைப்புகளும் முஸ்லிம் சமூகத்தவர்கள் மற்றும் சட்டநிபுணர்களும் சுட்டிக்காயிருந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரஜைகளின் திருமணமும், விவாகரத்தும் நிர்வகிக்கப்படும் பொதுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்தவர்களின் திருமணத்தினையும் விவாகரத்தையும் நிர்வகிக்கும் மாற்று வழிகளை அவர்களுக்கு வழங்குவது சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.