போராட்டக் களமாக மாறும் சிறிலங்கா! தாதியர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் போராட்டத்திற்கு முஸ்தீபு
Nurses
Struggle
SriLanka
Health workers
By Chanakyan
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என மருத்துவத்துறை ஊழியர்களும் அறிவித்துள்ளனர்.
அதன்படி 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத்துறையினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் 20 விதமான சுகாதாரத் தரப்பினர் இணைந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் ஒவ்வொரு அரச மருத்துவமனைகளுக்கு முன்பாக தாதியர்களும் மருத்துவர்களும் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ஆசிரியர்களும் அதிபர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.