மீண்டும் சின்மயியுடன் இணைந்த பிரபல முன்னணி இசையமைப்பாளர்
இந்திய (India) சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவரான சின்மயி (Chinmayi) மீண்டும் திரைப்படங்களில் பாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்து (Vairamuthu) தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமை மிகப்பெரிய அதிர்வலையை தமிழ் சினிமாவில் எற்படுத்தியது.
இதை தொடர்ந்து டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்ற காரணத்தால் அப்போது யூனியனின் தலைவராக இருந்த ராதா ரவி, சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்து தடை செய்தார்.
இசை வெளியீட்டு விழா
மேலும் அவருக்கு சினிமாவில் பாடுவதற்கு, டப்பிங் செய்வதற்கும் 5 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுபோன்ற பல பிரச்சனைகளை சின்மயி எதிர்கொண்ட வந்த நிலையில், சமீபத்தில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை பாடியிருந்தார்.
சின்மயியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்
கங்கை அமரன், விஜய் ஆண்டனி போன்றோர் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் டி. இமான் தனது இசையில் சின்மயியை புதிய படத்தில் பாடவைத்துள்ளார்.
கே எஸ் அதியமான் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்திற்காக டி. இமான் இசையில் சிநேகன் வரிகளில் இப்பாடலை பாடியுள்ளார் சின்மயி. இதுகுறித்து டி. இமான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் சின்மயியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, " Back to creating magic with the ever-soulful A melodious number that’s close to my heart" என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        