சாரதிகளுக்கும் பாதசாரிகளுக்கும் பொறுமை அவசியம்:வீதி பாதுகாப்பு தேசிய சபை
வீதி விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்யவும், சாரதிகளும் பாதசாரிகளும் பரஸ்பர மரியாதையையும் பொறுமையையும் அதிகமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அழைப்பு விடுத்துள்ளது.
வீதிப் பாதுகாப்பு என்பது போக்குவரத்து விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சமிக்ஞைகளைப் பின்பற்றுவதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது என்றும், அது பொறுப்பான நடத்தையையும் மற்ற வீதிப் பயனாளிகள் மீதான அக்கறையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.
வீதியைக் கடக்கும் இடங்களில் பாதசாரிகளுக்கு வழிவிடவும், மற்ற வாகனங்களுக்குப் போதுமான இடத்தை ஒதுக்கவும், தேவையற்ற ஒலிப்பான் ஒலிப்பதைத் தவிர்க்கவும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
வீதியைக் கடக்கும்போது போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கவும், எச்சரிக்கையுடன் செயல்படவும் பாதசாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

வீதியென்பது அனைவருக்கும் பொதுவான இடம் என்பதை அந்த சபை சுட்டிக்காட்டியதோடு, அனைத்து வீதிப் பயனாளிகளின் உயிர்களையும் உரிமைகளையும் மதிப்பது விபத்துகளையும் மோதல்களையும் தடுக்க உதவும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |