தமிழர் பகுதியில் கோர விபத்து: பலர் வைத்தியசாலையில்
Trincomalee
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 33 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (01) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிவியவருகையில், அம்பாறையிலிருந்து சாரதி உதவியாளர் உற்பட இருவருடன் திருகோணமலை நோக்கி பயணித்த லொறியும் கம்பஹா - வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் சேருவில ரஜ மஹா விகாரையை பார்வையிடுவதற்காக பயணித்த பேருந்தும் இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.
காவல்துறை விசாரணை
இந்த விபத்தில் காயமடைந்த காயமடைந்தோர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 3 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி