மியான்மா் ராணுவம் - தலிபான்களின் ஆட்சி..! ஐ.நா அதிரடி அறிவிப்பு
தடை
ஐ.நா. பொதுச் சபை ஆப்கானிஸ்தானுக்கு தலிபான்களையும், மியான்மருக்கு ராணுவ ஆட்சியாளா்களையும் பிரதிநிதித்துவம் அளிக்க தடை விதித்துள்ளது.
இதற்கான தீா்மானத்தை 193 உறுப்பு நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட அமைப்பு ஏக மனதாக நிறைவேற்றியுள்ளது.
இதையடுத்து, ஐ.நா.வில் மியான்மருக்கு முந்தைய ஆங் சான் சூகி அரசால் நியமிக்கப்பட்டவரும், ஆப்கானிஸ்தானுக்கு முந்தைய அஸ்ரப் கனி அரசால் நியமிக்கப்பட்டவருமே தொடா்ந்து தூதா்களாக செயல்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டது.
மியான்மர் - ஆப்கானிஸ்தான்
மியான்மரில் தோ்தல் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி அரசை ராணுவம் கடந்த ஆண்டு கலைத்தது.
இதனை சா்வதேச நாடுகள் கண்டித்தன.
அமெரிக்கா வெளியேறியதற்குப் பிறகு ஆப்கன் அரசைக் கைப்பற்றிய தலிபான்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

