மயிலந்தனை இனப்படுகொலையின் 31ஆம் ஆண்டு நினைவு இன்று
மனித வரலாறு என்று சொல்லப்படுவது பல்வேறு காலப்பரிமாணங்களைக்கொண்டது. அவற்றுள் நாம் வாழக்கூடிய இந்த நாட்கள் எமது இந்த தலைமுறையின் வாழ்வியலில் பதிவான கடந்த காலம் இவை எல்லாம் தமது பதிவுகளில் ஈழத்தமிழர்கள் என்ற பக்கத்தை பதிகின்றபோது துயர்தோய்ந்த கதையொன்றை பதிவாக்கிக்கொள்ளும்.
இப்படியாக கடந்த நூற்றாண்டின் அரைவாசி ஆயுள் முடிவடைந்த பின்னர் ஈழத்தமிழர்களின் ஆயுளை முடித்துவைக்கும் நோக்கில் சிறிலங்காவின் சிங்கள தரப்பு தமது அரச இயந்திரத்தை நகர்ந்தியிருந்தது.
அந்த வகையில் சிங்கள இனவாதிகளாலும் சிறிலங்கா இராணுவத்தினாலும் அதன் ஒட்டுக குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் என்பது இந்த தூற்றாண்டின் முதலாவது தசாப்தம் வரையிலான காலப்பகுதியில் நீண்டுவந்திருக்கிறது.
ஆரம்பகாலங்களில் கூட்டம் கூட்டமாக கொன்றொழிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் பின்னர் தமிழர்களுக்காக குரல்கொடுத்தவர்கள் ,அதனை ஊடக வெளிச்சத்தில் வெளிப்படுத்தியவர்கள் என ஈழத்தமிழர்களுக்கும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் என ஈழத்தமிழுக்கெதிரான படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
அந்தப் பட்டியலில் ஒரு துயரச்சம்பவமாக பதிவானது தான் மட்டக்களப்பின் மயிலந்தனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிக மிலேச்சத்தனமான படுகொலைச் சம்பவம்.
கடந்த 1992 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஒன்பதாம் திகதி இதே போன்ற நாளொன்றில் நடந்த அந்த துயரமான சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 31 ஆண்டுகள் கடக்கிறது.