அநுர ஆட்சியில் தொடரும் மர்ம மரணங்கள் : சர்வதேச விசாரணை கோரும் மொட்டுக்கட்சி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ”323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டேன் பிரியசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
சர்வதேச விசாரணை
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான விவகாரத்தில் ரங்க நிஷாந்த ராஜபக்ச என்ற திறைசேரி அதிகாரி, உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.

தற்போது, முன்னாள் காவல்துறை மா அதிபர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் எதுவுமே புரியாமல் உள்ளது. இவற்றை உயிர்மாய்ப்பு சம்பவங்கள் என்று மறந்துவிட முடியாது, இவற்றில் சந்தேகம் நிலவுகின்றது.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்துக்குத் திறனோ அல்லது வலிமையோ இல்லையெனில், FBI போன்ற சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியைப் பெற்று விசாரணைகளை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்