கனடாவில் வீடு ஒன்றில் மர்மமான முறையில் கிடைத்த சடலங்கள் - தீவிர விசாரணையில் காவல்துறை
Canada
Death
By pavan
கனடாவின் வடக்கு கிழக்கு ஒன்றாரியோவின் ஹுட்சன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று பேர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைககளை ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில், குறித்த வீட்டில் இந்த மூன்று பேரும் இருந்தார்கள் எனவும் அவர்கள் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று பேரின் மரணம் பற்றிய மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அதேவேளை, வார இறுதியில் இந்த மரணங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனை நடாத்தப்படவுள்ளது.
மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
இந்த மரணங்களினால் குறித்த பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் கிடையாது எனவும் காவல்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் பற்றிய ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி