செல்வம் எம்.பிக்கு எதிராக சி.ஐ.டியில் முன்னிலையாக தயார்: முக்கிய புள்ளி பகிரங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் எப்பொழுதும் முன்னிலையாக தயார் என ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர் என்.கே விந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “42 வருடங்களாக எனக்கு செல்வம் அடைக்கலநாதனை தெரியும்.
திட்டமிட்டு என்னை போன்றவர்கள் வளர்ந்து விட கூடாது என பல சதி செயல்களை செய்தவர்தான் அவர்.
அது குறித்த குரல்பதிவுகள், ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் என அணைத்தும் என்னிடம் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குரல் பதிவு விவகாரத்தை தாண்டிய மற்றுமொரு சம்பவம், செல்வம் அடைக்கலநாதனின் அரசியல் பயணம் மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |