தலாவயில் பேருந்து விபத்து! பாடசாலை மாணவர் உட்பட 6 பேர் பலி - 25 பேர் படுகாயம்
புதிய இணைப்பு
அநுராதபுரம், தலாவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த ஆறு பேரினுள் பாடசாலை மாணவரொருவரும் உள்ளடங்குவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் (10.11.2025) ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் 25 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அதன்படி, காயமடைந்தவர்களுள் இன்றைய தினம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெறும் சந்தர்ப்பத்தில் பேருந்தில் 40க்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.



