கனடாவில் தேடப்படும் இளைஞர்: காவல்துறையினரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின்(Canada) நோவா ஸ்கோஷியா பகுதியில் இளைஞர் ஒருவரை ரோயல் கனடியன் மவுண்ட் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நோவா ஸ்கோஷியாவின்(Nova Scotia) கிழக்குக் கரையோரத்தின் மேற்கு பெட்பெஸ்விக் (West Petpeswick) பகுதியிலுள்ள 26 வயதான பிராண்டன் க்ராஃபோர்ட் கிராண்ட் என்ற இளைஞரையே இவ்வாறு தேடி வருகின்றனர்.
குறித்த இளைஞர் காரணமின்றி தப்பி ஓடியதற்காகவே இந்த இவ்வாறு தேடப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
பொது எச்சரிக்கை
கடந்த 19ஆம் திகதி இரவு, சுமார் 9:30 மணியளவில், வெஸ்ட் பெட்பெஸ்விக் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதர் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இறுதியில் அந்த நபர் கிராண்ட் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் அவர் வீட்டை கோடரியால் சேதப்படுத்தி காட்டுக்குள் ஓடிவிட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் , ஆறு அடி நான்கு அங்குலம் உயரமுடையவர், அவருக்கு பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் உள்ளன என காவல்துறையினர் அடையாளம் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரை நெருங்க வேண்டாம் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அந்த இளைஞரை எங்கு பார்த்தாலும் தெரிவிக்குமாறும்,உடனடியாக 911 ஐ அழைக்கவும் என குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |