விசம் வழங்கிய தாயால் உயிரை இழந்த பச்சிளம் குழந்தை..!
Gampaha
Sri Lanka
Death
By Vanan
தாயால் விசம் வழங்கி கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயது குழந்தை இன்று காலை உயிரிழந்துள்ளது.
லொலுகொட பிரதேசத்தை சேர்ந்த கேஷான் என்ற ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாய் விசம் அருந்தி குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளதால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கம்பஹா நல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சை
மேலும் தாய் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விசம் கொடுத்துவிட்டு ஆபத்தான நிலையில் வட்டுப்பிட்டியால வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பிரதேசத்தின் சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மற்றைய எட்டு வயது குழந்தையும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாககாவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்