நல்லூர் கந்தனின் ஏழாம் நாள் திருவிழா இன்று
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் ஏழாம் நாள் இன்றாகும்.
ஏழாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் இன்று (04) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளன.
இதன்போது விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் உள்வீதியுலா வருவார்.
ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 7ஆம் திகதி மஞ்ச திருவிழாவும், 20 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும், 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளை உங்கள் IBC Tamil TV, LankaSri News மற்றும் IBC Tamil News ஆகிய YouTube தளங்களில் நேரலையாக காண முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை - திருவிழா
