நல்லூர் பதியமர்ந்த அலங்காரக் கந்தனுக்கு இன்று பூங்காவனத் திருவிழா (நேரலை)
Jaffna
Nallur Kandaswamy Kovil
Nothern Province
Srilankan Tamil News
By Kathirpriya
சென்ற மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 26ஆம் நாளான இன்று (15) பூங்காவனம் இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு பூங்காவனம் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து முருகப் பெருமானின் திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் (14) நல்லூர் கந்தனிற்கான தீர்த்தோற்சவம் காலை 6 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றது.
பின்னர் மாலை 6 மணிக்கு நடைபெற்று பூஜைகள் கொடியிறக்கத்துடன் ஆலய மகோற்சவ திருவிழாக்கள் இனிதே நிறைவடைந்தன.
நாளைய தினம் (16) இறுதி நாளாக மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவத்துடன் நல்லூர் ஆலயத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் முழுமையாக நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்