அமெரிக்காவை உலுக்கும் விமான விபத்துக்கள்: காரணத்தை அம்பலப்படுத்திய ட்ரம்ப்
அமெரிக்காவில் (United States) இடம்பெறும் விமான விபத்துக்களுக்கு பாலின பணியமர்த்தலே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டனில் (Washington) கடந்த வாரம் புதன்கிழமை, இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றும் பயணிகள் விமானம் ஒன்றும் மோதிய விபத்தில் 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய மோசமான விமான விபத்தாக பார்க்கப்படுகிறது.
பாலின பணியமர்த்தல்
இதைத் தொடர்ந்து, பிலதெல்பியாவில் வெள்ளிக்கிழமையன்று, மருத்துவ ஜெட் விமானம் அல்லது ஏர் ஆம்புலன்சாக பயன்படுத்தப்படும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட ஆறு பேர் பலியானார்கள்.
அமெரிக்காவில் இவ்வாறு அடுத்தடுத்து விமான விபத்துக்கள் அரங்கேறிய நிலையில் இதற்கு அனைத்து பாலின பணியமர்த்தலே காரணம் என பேரழிவை சுட்டிக்காட்டி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
விமான விபத்து
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்துக்களுக்கு அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களால் பயன்படுத்தப்படும் காலாவதியான கணினி அமைப்புகளே காரணம் என்று டொனால்ட் ட்ரம்ப் புதிய காரணம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பழைய கணினி அமைப்புகளை மாற்றி கட்டுப்பாட்டு கோபுரங்களில் சிறந்த கணினிமயமாக்கப்பட்ட அமைப்புகள் பொருத்தப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்பு புதிய கணினி அமைப்புகளில் முதலீடு செய்வதற்கு பதிலாக இதுவரை பழைய கணினி அமைப்புகளை புதுப்பிக்க முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |