யாழில் வீட்டில் புகுந்து திருட்டு : சிக்கிய 4 இளைஞர்கள்
யாழில் (Jaffna) வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியிலுள்ள வீடொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த மூன்றாம் திகதி வீடொன்றில் நகைகள் திருடப்பட்டதாக கோப்பாய் காவல் பிரிவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்ட விசாரணை
இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் (07) குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து ஒரு தொகை நகைகள் மற்றும் பணம் என்பவை மீட்கப்பட்டுள்ளதுடன், இரண்டு கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 18 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)