தமிழர் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுமி பலி
வவுனியாவில் (Vavuniya) மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (07) வவுனியா வடக்கு - புளியங்குளம், பழையவாடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஆறு வயதுடைய ந.மதுசாளின என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆறு வயது சிறுமி கொய்யா மரத்தில் ஏறி விளையாடியுள்ளார்.
தவறுதலாக கீழே விழுந்த போது நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு சென்ற மின்சார வயரின் இணைப்பில் சிறுமி சிக்கியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
வீட்டார் குறித்த சிறுமியை மட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதும் சிறுமி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புளியங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
