நல்லூரான் கொடியிறக்கம்..!
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் இறுதி நாளான இன்று{14), கொடியிறக்கம் நடைபெற்று அதனுடன் ஆலய மகோற்சவ திருவிழா இனிதே நிறைவடைந்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா , கடந்த மாதம் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் திருவிழாக்கள் இடம்பெற்று வந்தன.
தீர்த்தத்திருவிழா
இறுதி நாளான இன்றை தினம் காலை , தீர்த்தத்திருவிழா அதிகளவான பக்தர்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
தீர்த்த திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் மாலை கொடியிறக்கம் நடைபெற்று அதனுடன் ஆலய மகோற்சவ திருவிழா நிறைவடைந்துள்ளது.
நாளைய தினம் மாலை 5 மணிக்கு முருக பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது.