தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி நல்லூர் கந்தன் : பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பு (காணொளி)
இரண்டாம் இணைப்பு
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (13) புதன்கிழமை காலை நடைபெற்றது.
காலை 6.15 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டப பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 07 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.
இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை, ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.
நாளைய தினம் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் தீர்த்தோற்சவமும் மாலை 5 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.
முதலாம் இணைப்பு
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ திருவிழா இன்றைக்கு(13) 24 ஆவது நாளாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
24 ஆவது நாளான இன்று நல்லையம்பதி பெருமானின் தேர்திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நல்லுரானை தரிசித்து ஆசிகளை பெற பக்தர் கோடிகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருவது வழக்கம்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவானது கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.











