மகிந்தவின் உடல்நிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட நாமல்!
தந்தையின் உடல் நலம் தற்போது சீராக உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்வையிட வருகைத் தந்திருந்த நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இளவரசர் யார் அரசன் யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுகேகொடை பேரணி
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நுகேகொடை பேரணியைப் போல மற்றுமொரு பேரணியை நடத்த தீர்மானித்து வருகிறோம்.
கட்சியாக, சகோதர கட்சிகளுடன் இணைந்து மேடையொன்றை உருவாக்கினோம். என்னுடைய பட்டப்படிப்பு தொடர்பில் நிரூபிக்க வேண்டியவர்களிடம் நிரூபித்துள்ளேன். அடுத்த பேரணிக்கு முதல் இதனை மீண்டும் பேசுபொருளாக மாற்றுவார்கள்.
தற்போது நாட்டில் நிலவி வரக்கூடிய அனர்த்த நிலைமைக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்திட்டங்களுக்கு கட்சியாக முழு ஆதரவு வழங்கப்படும். ” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |