நாமல் ராஜபக்சவின் சொத்துப் பின்னணி...! வெடித்த புதிய சர்ச்சை
Namal Rajapaksa
Sri Lanka
Government Of Sri Lanka
By Shalini Balachandran
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும் அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வந்தவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஒரு காலத்தில் கன்சல்டன்ட் ஃபார்ம் (Consultant Firm) என்ற ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தியதாகவும் அதன் வருமானம் மற்றும் வரி கணக்குகள் அனைத்தையும் முறையாகப் பிரகடனப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலடியாக அவரது குடும்பத்தின் சொத்துக்கள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி