பிரதி அமைச்சருடன் வலுக்கும் முறுகல்! பொறுமையிழந்த நாமல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு பின்னணியில் நாமல் ராஜபக்ச தொடர்பு பட்டிருப்பதாக வட்டகல குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த இன்று தனது முடிவை உறுதிப்படுத்திய நாமல், இதுபோன்ற அவதூறு குற்றச்சாட்டுகளை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தீவிரமடைந்துள்ள மோதல்
செப்டம்பர் 10 ஆம் திகதி நாமலின் சார்பாகச் செயல்படும் சட்டத்தரணி சங்க கருணாரத்ன, பிரதி அமைச்சரிடமிருந்து ரூ. 1 பில்லியன் இழப்பீடு கோரி கோரிக்கை கடிதம் அனுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சட்டத்தரணி மஞ்சுளா பாலசூரிய மூலம் பிரதி அமைச்சர் வட்டகல, செப்டம்பர் 22 ஆம் திகதி நாமல் ராஜபக்சவிடமிருந்து ரூ. 2 பில்லியன் இழப்பீடு கோரி கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இவ்வாறானதொரு பின்னணியில், இருவருக்கும் இடையிலான மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
