இஸ்ரேல் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டு பொய்: கொந்தளித்த நெதன்யாகு
காசாவில் (Gaza) இனப்படுகொலை செய்வதாக இஸ்ரேல் (Israel) மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய் அதற்கு ஆதாரமில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் இன்று (26) உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இனப்படுகொலை என தவறான குற்றச்சாட்டு இங்கு வைக்கப்படுகின்றது.
அப்பாவி மக்கள்
அப்பாவி மக்கள் மற்றும் பெண்கள் மீது வேண்டுமென்றே தாக்குவதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை, காசா மக்களுக்கு இஸ்ரேல் உணவு வழங்கம் போது அந்நாட்டு மக்களை பட்டினியில் ஆழ்த்துவதாக எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
காசா மக்களுக்கு போதிய உணவு இல்லை என்றால் அதற்கு ஹமாஸ் அமைப்பினர் உணவுப்பொருட்களை திருடுவதே காரணம்.
பயங்கரவாதிகள்
அதனை பதுக்கி விற்பனை செய்து போர் செய்வதற்கான செலவுக்கு பயன்படுத்துகின்றனர்.
பிரித்தானியா (United Kingdom), அவுஸ்திரேலியா (Australia), கனடா (Canada) மற்றும் சில நாட்டு தலைவர்கள் பலஸ்தீனத்தை (Palestine) தனி நாடாக அங்கீகரித்துள்ளனர்.
ஒக்டோபர் ஹமாஸ் பயங்கரவாதிகள் செய்த அட்டூழியத்தை பார்த்த பிறகும் அவர்கள் அதனைச் செய்துள்ளனர்.
இருப்பினும், நாங்கள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மாட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
