டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்தவே டக்ளஸ் கைது - அரசை போட்டுத்தாக்கும் நாமல்
டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு தற்போது மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பேதே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் ரீதியாக திவால்
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் அரசியல் ரீதியாக திவாலாகி வரும் அதே வேளையில் அரசியல் அடக்குமுறையையும் செயல்படுத்துகிறது.

டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, பாதாள உலகக் குழு உறுப்பினர் வசம் சென்ற விவகாரம் தொடர்பிலேயே டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |