2009 இறுதிப் போரின் பின் கிடைத்த அனுபவம்....! அரசுக்கு பாடமெடுக்கும் நாமல் எம்.பி
இறுதி போரின் பின்னர் நடைபெற்ற மீள் குடியோற்றம் மற்றும் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்தமை தொடர்பிலான அனுபவங்களை பெற்றுக் கொள்ளுமாறு மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
அனர்த்த நிவாரணங்கள் தொடர்பில் நேற்று (10.12.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி போரின் பின்னர் பாரிய மக்கள் தொகையினர் வடக்கில் முகாம்களில் இருந்தனர்.
மீள் குடியேற்ற மற்றும் இயல்பு நிலை
அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்ற மற்றும் இயல்பு நிலையை ஏற்படுத்த ஒழுங்கான திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது.

அத்தோடு சுனாமியின் போதும் அழிவடைந்த பாரிய சொத்துக்கள மற்றும் வர்த்தகத்தை மீள கட்டியெழுப்ப முடிந்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் குறுகிய காலத்தில நடைபெற்றுள்ளன. இவ்வாறான அனுபவங்களை அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
குறையை பேசி அரசியல்
அதை விடுத்து 76 வருட சாபங்களை பேசி வைராக்கியத்துடன் செயற்படுவதில் எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை.

கடந்த காலங்களில் நாட்டின் தலைவர்கள் செய்தவற்றை உற்று நோக்குங்கள். மில்லியன் 250 ரூபாவை மட்டும் பெற்றுக் கொண்டு சும்மா இருக்காமல் அவர் இந்த நாட்டில் எவ்வாறு செயற்பட்டார் என்று தேடி பாருங்கள்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது அரசாங்கம் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள். எந்நேரமும் குறையை பேசி அரசியல் நடத்தாமல் மக்களை சீக்கிரமாக மீள குடியேற்றம் செய்யவும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |