மதங்களுக்கு எதிராக செயல்படும் அரசாங்கம்! நாமலின் ஆவேசம்
தற்போதைய அரசாங்கம் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டின் கலாச்சாரம் மற்றும் மதங்களுக்கு எதிராக செயல்படத் தயாராக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.டி. லால்காந்த தனது சமீபத்திய கருத்துகள் மூலம் இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
லால் காந்தவின் கூற்று
அதன்போது மேலும் கருத்து தெரிவத்த அவர், “கோட் அணிந்திருப்பவர்களைத் தாக்குவேன் என்று அமைச்சர் லால்காந்த கூறியுள்ளார்.

மேலும், காவி அங்கி அணிபவர்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் பொருள் அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டின் கலாச்சாரத்தையும் மதங்களையும் அழிக்கத் தயாராக உள்ளனர்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |