மொட்டுக்கட்சியின் வேட்பாளர் நாட்டின் சொத்துக்களை விற்கமாட்டார்: நாமல் சூளுரை!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ (Ranil Wickremesinghe) அல்லது வர்த்தகர் தம்மிக்க பெரேராவோ (Dhammika Perera) போட்டியிடவுள்ளமை தொடர்பாக எந்தவொரு எழுத்து மூல தகவலும் தமக்கு கிடைக்கவில்லையென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துவது யார் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொருத்தமான வேட்பாளர்
தொடர்ந்து தெரிவிக்கையில், ”சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தேசிய சொத்துக்களை விற்காமல் நாட்டின் கடனை செலுத்தும் திறன் கொண்டவராக இருப்பார்.
கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம், உரிய நேரத்தில் பொருத்தமான வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |