மொட்டுக் கட்சியைப் பலப்படுத்த நாமலின் புதிய திட்டம்
இலங்கையின் பலம் வாய்ந்த கட்சியாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவை தக்கவைப்பதற்கு முழு அர்ப்பணிப்பை வழங்குவதாக கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவை மக்கள் மத்தியில் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதன்படி, கிராமப்புற மக்களின் வீடு வீடாகச் சென்று கட்சி உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி
அதற்கான முதற்கட்ட நடவடிக்கை தங்காலை தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக பொதுஜன பெரமுன இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |