நாமலை அரசியலுக்கு இழுத்து வந்தது யார்? அவரே வெளியிட்ட தகவல்
politics
parliament
mangala samaraweera
namal rajapaksha
By Sumithiran
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவே தம்மை அரசியலுக்கு வருமாறு தனது தந்தையிடம் முதலில் முன்மொழிந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கேற்ப அரசியலில் பிரவேசித்ததாகவும் தனது முயற்சிகளை நன்றியுடன் நினைவுகூருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மீதான இரங்கல் விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்த போது 2005ஆம் ஆண்டு மங்கள சமரவீரவை முதன்முதலில் சந்தித்ததாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீரவின் அரசியல் கருத்துக்களை பொருட்படுத்தாமல் அவருடன் நெருக்கமாக செயற்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
