அவசர அவசரமாக மாலைதீவு பறந்த நாமல்: வெளியானது காரணம்!
இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமீபத்தில் மாலைதீவுக்குச் சென்றதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அவரைக் கைது செய்ய ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள மாலத்தீவுக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அது மாலைதீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அப்துல்லா ஜிஹாத்தின் மகள் திருமணம் என்றும் கூறப்படுகிறது.
ஜனாதிபதியுடனான பயணம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அதே விமானத்தில் ஒரே வணிக வகுப்பில் மாலைதீவுக்கு சென்றிருந்தார்.
விமான பயணம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்த நிலையில், அதன்போது அவர்கள் இருவரும் சுருக்கமான உரையாடலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மறுநாள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மறுநாள் இலங்கைக்குத் திரும்பினார். விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்படுவார் என்ற சந்தேகம் இருந்தபோதிலும், அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை.
நாட்டுக்கு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர், விமான நிலையத்திலிருந்து நேராக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று ஒரு மனுவை தாக்கல் செய்து பிணையையும் பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
